2012-07-23 15:43:13

கவிதைக் கனவுகள் - உன்னைப் பண்படுத்து


அந்தப் பாழ்க் கிணற்றிலிருந்து வெளிவந்தது
தவளையின் அலறல் சப்தம்.
அவ்வழியே சென்ற வழிபோக்கரை
அது எட்டிப் பார்க்கவும் வைத்தது.
பாவம் தவளை.
பாம்புகள் நடுவில் மாட்டியிருந்த தவளை
பாம்புகள் தன்னைத் துன்புறுத்துவதாகப் புகார் சொன்னது.
வழிபோக்கர் சொன்னார் தவளையிடம்
நீ இந்தத் துயரத்திலிருந்து விடுபட விரும்பினால்
இங்கிருந்து தப்பித்துச் செல்வதே ஒரேவழி என்று.
அந்த வழிப்போக்கர் சொல்லிக் கொண்டே நடந்தார்
மனிதர் பலரும் இந்தத் தவளை போலவே வாழ்கிறார்களே!.
தன்னோடு வாழ்பவர்கள், தன்னோடு பழகுகிறவர்கள் மீது
எப்போதும் வீண்சொற்களைச் சுமத்தி சுமத்தியே
மனநிம்மதியைக் கெடுத்துக் கொள்கிறார்களே!.
பிறரது செயல்களைப் பாராது
தன்னை முதலில் பண்படுத்துவது குறித்துச் சிந்திக்க வேண்டாமா?
சிந்தித்தால் தனது துயர நிலையிலிருந்து விடுபடலாமே!.
சுவாமி விவேகானந்தரும் இப்படிச் சொன்னாரே என
மந்திரம் போலச் சொல்லிக் கொண்டே நடந்தார் வழிபோக்கர்.
“இவரது குற்றத்தையும் அவரது குற்றத்தையும் பார்க்க
எல்லாராலும் முடியும், ஆனால்
தனது குற்றத்தைப் பார்க்க யாரும் முயற்சிப்பதில்லை.
இந்தத் தவறு ஒருபோதும் நடக்கக் கூடாது”.







All the contents on this site are copyrighted ©.