2012-07-21 15:41:16

கொலம்பிய மக்கள் Chiquinquira அன்னைமரியின் நினைவோடு சுதந்திர தினத்தைச் சிறப்பிக்க வத்திக்கான் அதிகாரி அழைப்பு


ஜூலை21,2012. சுதந்திர தினத்தைக் கொண்டாடும் கொலம்பிய நாடு தனது பாதுகாவலியான Chiquinquira அன்னைமரியை மறக்கக் கூடாது என்று, அந்நாட்டின் சுதந்திர தின விழாவுக்குச் சென்றிருந்த வத்திக்கான் அதிகாரி ஒருவர் கேட்டுக் கொண்டார்.
அன்னைமரியா மீது கொலம்பிய மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையே அவர்கள் தங்களது துன்பங்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள உதவியது என்று, வத்திக்கான் நகர நிர்வாகத்தின் தலைவர் கர்தினால் Giuseppe Bertello கூறினார்.
ஜூலை 20, இவ்வெள்ளியன்று கொலம்பியத் தலைநகர் பொகோட்டாவில் சிறப்பிக்கப்பட்ட திருப்பலியில் திருப்பீடத்துக்கான 25 அரசியல் தூதர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தென் அமெரிக்க நாடான கொலம்பியா, 1810ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இஸ்பெயினிடமிருந்து விடுதலை பெற்றது. இது உலகில் பரப்பளவில் 26வது பெரிய நாடாகவும், மக்கள்தொகையில் 27வது பெரிய நாடாகவும், தென் அமெரிக்காவில் நான்காவது பெரிய நாடாகவும் அமைந்துள்ளது.







All the contents on this site are copyrighted ©.