2012-07-21 15:46:18

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு உலகத் தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் : இத்தாலிய வெளியுறவு அமைச்சர்


ஜூலை,21,2012. உலகில் இடம்பெறும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்துவதற்கு உலகத் தலைவர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என இத்தாலிய வெளியுறவுத் துறை அமைச்சர் Giulio Terzi கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் இவ்வாண்டின் ஆரம்பம் முதல் சுமார் 800 கிறிஸ்தவர்கள் அந்நாட்டின் Boko Haram இசுலாமியத் தீவிரவாத அமைப்பால் கொல்லப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய Terzi, உலகில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை, குறிப்பாக ஆப்ரிக்காவில் பொதுவான நிகழ்வாக இருந்து வருகிறது என்று கூறினார்.
உரோம் நிர்வாகம் மற்றும் இத்தாலிய வெளியுறவு அமைச்சகத்தின் கூட்டு முயற்சியினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சமய சுதந்திரக் கண்காணிப்பு என்ற அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் இவ்வாரத்தில் பேசியபோது இவ்வாறு பேசினார் Terzi.
உலகில் சமய சுதந்திரத்தை ஊக்குவித்து, சிறுபான்மையினர் உரிமைகளைப் பாதுகாப்பது இத்தாலிய அரசின் வெளியுறவுக் கொள்கையில் முன்னுரிமை பெற்றுள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.







All the contents on this site are copyrighted ©.