2012-07-21 15:46:02

எகிப்தில் கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் புதிய சட்ட எண் அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டும் : Al-Azhar பல்கலைக்கழகம் பரிந்துரை


ஜூலை,21,2012. எகிப்தில் ஷாரியா என்ற இசுலாமியச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், கிறிஸ்தவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் ஒரு புதிய சட்ட எண் அந்நாட்டின் அரசியல் அமைப்பில் இடம்பெற வேண்டுமென Al-Azhar பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளது.
எகிப்தின் புதிய அரசியல் அமைப்பு குறித்து அந்நாட்டின் அடிப்படைவாத இசுலாமியருக்கும், மிதவாத இசுலாமியருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதங்கள் நடைபெற்றதையடுத்து இவ்வாறு பரிந்துரைத்துள்ளது அந்நாட்டின் Al-Azhar பல்கலைக்கழகம்.
“நாட்டின் மதம் இசுலாம், நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி அராபியம். ஷாரியா என்ற இசுலாமிய சட்டத்தின் கொள்கைகள் நாட்டின் சட்ட அமைப்புக்கு முக்கிய ஆதாரமாக இருக்க வேண்டும்” என்ற ஒரு சட்ட எண்ணை இம்மாதத் தொடக்கத்தில் எகிப்தின் சட்டசபைக் குழு பரிந்துரை செய்திருந்தது. எனினும், கிறிஸ்தவர்களும் யூதர்களும் அவரவர் மதங்களின் வழிமுறைகளைப் பின்பற்றலாம் என்ற புதிய பகுதியை எகிப்திய சட்டசபை இணைத்துள்ளது என்று ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.







All the contents on this site are copyrighted ©.