2012-07-20 16:05:13

ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது அமைதியை ஊக்குவிக்க இளையோர்க்கு அழைப்பு


ஜூலை,20,2012. இலண்டன் மாநகரில் இம்மாதம் 27ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இடம்பெறும் ஒலிம்பிக் விளையாட்டுக்களின்போது அமைதியை ஊக்குவிக்குமாறு CAFOD பிறரன்பு அமைப்பு இளையோர்க்கு அழைப்பு விடுத்துள்ளது.
விளையாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் செய்வதற்கு உதவியாக 100 நாள் போர் நிறுத்த அமைதி நடவடிக்கையை ஊக்குவித்து வரும் CAFOD அமைப்பு, 2012ம் ஆண்டில் உலகில் அமைதியில் வாழாத அனைத்துப் பகுதிகளுக்கும் அமைதி குறித்த ஒலி-ஒளிப் படங்கள் மற்றும் செய்திகளை வலைத்தளத்தில் பதிவு செய்யுமாறு இளையோருக்கு விண்ணப்பித்துள்ளது.
அமைதி மற்றும் ஒப்புரவுப் பணிக்காக விளையாட்டைப் பயன்படுத்தும் உகாண்டா, கொலம்பியா, ருவாண்டா, பிரிட்டன் பிலிப்பீன்ஸ் ஆகிய ஐந்து நாடுகளில் இவ்வமைப்பு அதிகக் கவனம் செலுத்தி வருகிறது.
CAFOD அமைப்பின் இந்த வலைத்தள நடவடிக்கையில் இதுவரை 500க்கும் அதிகமான இளையோர் பங்கெடுத்துள்ளனர்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டின் எரியும் சுடரை அருள்சகோதரி Mary-Joy Langdon இம்மாதம் 24ம் தேதி Kingston லிருந்து எடுத்துச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் தீயணைப்புப்படைப் பிரிவில் 1976ம் ஆண்டில் முதல் முதலாகச் சேர்ந்த பெண் என்ற பெருமையைப் பெறுபவர் அருள்சகோதரி Mary-Joy Langdon. இவர் 1984ம் ஆண்டில் குழந்தை இயேசு சகோதரிகள் சபையில் சேர்ந்தார்.








All the contents on this site are copyrighted ©.