2012-07-14 15:04:23

ஐரோப்பாவில் 2 கோடியே 20 இலட்சம் பேர் வேலைகளை இழக்கக்கூடும் : ILO நிறுவனம் எச்சரிக்கை


ஜூலை14,2012. யூரோ பணம் புழக்கத்திலுள்ள 17 ஐரோப்பிய நாடுகளில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏறக்குறைய 2 கோடியே 20 இலட்சம் பேர் வேலைகளை இழக்கக்கூடும் என்று ILO என்ற உலக தொழில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்நாடுகளில் எடுக்கப்பட்டுவரும் சிக்கன நடவடிக்கைகள் எல்லா மட்டங்களிலும் சரியாகப் பலனளிக்கவில்லை என்று ILO நிறுவனத்தில் பேசிய மூத்த பொருளாதார நிபுணர் Steven Tobin, இந்நடவடிக்கைகள் வளர்ச்சியை ஊக்குவிக்கவில்லை, அத்துடன் வேலைவாய்ப்புக்களையும் உருவாக்கவில்லை என்று குறை கூறினார்.
இந்தச் சிக்கன நடவடிக்கைகளால் அடுத்த நான்கு ஆண்டுகளில் மேலும் 45 வேலைகள் இல்லாமல் போகும், இதனால் ஏறக்குறைய 2 கோடியே 20 இலட்சம் பேர் வேலைகளை இழக்கக்கூடும் என்று ILO நிறுவனம் கூறியுள்ளது.







All the contents on this site are copyrighted ©.