2012-07-14 15:01:38

அருள்தந்தை லொம்பார்தி : இசையும் அமைதியும்


ஜூலை14,2012. கலைநயத்தோடு விவரிக்க முயற்சிக்கும் எந்தவொரு செயலும் மனித சமுதாயத்தின் உள்ளார்ந்த விழுமியத்தை எடுத்துச் சொல்லும் சக்திமிக்க செய்தியாக இருக்கின்றது என்று இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
புனித பெனடிக்ட் விழாவான இப்புதனன்று காஸ்தெல் கந்தோல்ஃபோவில் திருத்தந்தை மற்றும் இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ முன்னிலையில் நடத்தப்பட்ட இசைக்கச்சேரி குறித்து வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் பேசிய அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனாவைச் சேர்ந்த இளையோர், அரபு நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் ஆகியோரைக் கொண்டிருந்த இந்தப் புகழ்பெற்ற இசைக்குழு Beethoven அவர்களின் இரண்டு இசைத் தொகுப்புக்களை மிக நேர்த்தியாக முழங்கியது.
இந்த இசைக் குழுவில் இசைக்கருவிகளை முழக்கிய யூதர்கள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், நல்லிணக்க ஒலியை மட்டும் உருவாக்கவில்லை, மாறாக, ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதால் ஏற்படும் நல்லிணக்கத்தை தங்களது ஆன்மாக்களில் மீட்டினார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த இசைக்கச்சேரி நம்பிக்கையின் அடையாளமாகவும், ஆழமான ஆன்மீகச் சக்தியைக் கொண்டதாகவும் இருந்தது என்ற அருள்தந்தை லொம்பார்தி, வருகிற செப்டம்பரில் லெபனனுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தைக்கு வாழ்த்தும் தெரிவித்தார்







All the contents on this site are copyrighted ©.