2012-07-13 16:12:34

மதமாற்றக் குற்றச்சாட்டுக்களுக்குத் தகவல் உரிமை பெறும் சட்டம் மூலம் சவால் விடுக்க கோரிக்கை


ஜூலை13,2012. கிறிஸ்தவர்கள் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம் சுமத்தும் இந்து தீவிரவாதக் கும்பல்களுக்குச் சவால் விடுப்பதற்குத் தகவல் உரிமை பெறும் சட்டம் சிறந்த கருவி என்று ஒரு கத்தோலிக்கப் பொதுநிலைத் தலைவர் கருத்து தெரிவித்தார்.
மனித உரிமைகள் மற்றும் சமய உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த சுமார் 50 தலைவர்களும் பொதுநிலையினர் அமைப்புகளும் மங்களூரில் நடத்திய கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார் அனைத்திந்திய கிறிஸ்தவ அவைத் தலைவர் ஜோசப் டி சூசா.
இந்து தீவிரவாதக் கும்பல்களால் பதட்டநிலைகள் அதிகமாக ஏற்படும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் RTI என்ற தகவல் உரிமை பெறும் சட்டத்தைப் பயன்படுத்தி அக்கும்பல்களுக்குச் சவால் விடுக்குமாறு கேட்டுக் கொண்டார் டி சூசா. இந்து அடிப்படைவாதிகள் திடீரென முளைக்கவில்லை, மாறாக, கடந்த 75 ஆண்டுகளாக அவர்கள் தொடர்ந்து திட்டம் வகுத்து வருகின்றனர் என்றும் டி சூசா குறை கூறினார்.







All the contents on this site are copyrighted ©.