2012-07-12 15:09:46

ஒலிம்பிக் போட்டிகள் - Dow Chemicals ஆதரவுக்கு இலண்டன் மாநகர அவை கண்டனம்


ஜூலை,12,2012 அமெரிக்க நிறுவனமான Dow Chemicalsஐ இலண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் ஒரு அதிகாரப்பூர்வ விளம்பரதாரராக நியமித்துள்ள அனைத்துலக ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு, இலண்டன் மாநகர அவை கண்டனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் Dow Chemicals நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்துவதால் ஒலிம்பிக் கூட்டமைப்பின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறும் ஒரு தீர்மானத்துக்கு இலண்டன் மாநகர அவை ஆதரவு தெரிவித்துள்ளது.
Dow Chemicalsன் இந்தியக் கிளையான Union Carbideன் போபால் ஆலையில் 1984ம் ஆண்டு ஏற்பட்ட நச்சுவாயு கசிவில், சுமார் 25,000 பேர் கொல்லப்பட்டனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இக்கொடிய விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டி, இந்தியாவிலும் ஏனைய நாடுகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.