2012-07-11 15:18:07

உரோம் நகரில் நடைபெற்ற கத்தோலிக்க, இஸ்லாமிய நல்லுறவுக் கூட்டம்


ஜூலை,11,2012. கத்தோலிக்க, இஸ்லாமிய நல்லுறவுக் கூட்டம் இச்செவ்வாயன்று உரோம் நகரில் நடைபெற்றது. திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் தலைவர் கர்தினால் Jean-Louis Tauran, கத்தோலிக்கர்களின் சார்பாகவும், பேராசிரியர் Hamid bin Ahmad Al-Rifaie, இஸ்லாமியர்களின் சார்பாகவும் இக்கூட்டத்தில் தலைமைப் பொறுப்பேற்றனர்.
1995ம் ஆண்டு முதல் கத்தோலிக்க இஸ்லாமிய உரையாடல் வளர்ந்துவந்துள்ள வரலாறு இக்கூட்டத்தில் விளக்கப்பட்டது. இன்றைய உலகில் இவ்விரு மதங்களுக்கும் இடையே நிலவும் உறவுகள் பற்றி கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இவ்வமைப்பின் அடுத்த அமர்வு உரோம் நகரில் 2013ம் ஆண்டு நடைபெறும் என்றும், மதம் சாராப் போக்கும், பொருளியலும் மத நம்பிக்கையுள்ளவர்களை எவ்வகையில் பாதிக்கின்றன என்பது அந்த அமர்வில் விவாதிக்கப்படும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.








All the contents on this site are copyrighted ©.