2012-07-09 15:57:24

கவிதைக் கனவுகள் ... கோடை விடுமுறை


பொருளாதார நிதி நெருக்கடிகள்
தொழிற்சாலைகளை மூடி
ஆள்குறைப்பை அரங்கேற்றி
தாராளமயமாக்கி வருகின்றன சிக்கனத்தை.
கொளுத்துகின்ற கோடை வெயிலும்
சிக்கனமில்லாமல் தாராளப்படுத்தி வருகிறது வெப்பத்தை.
வெயிலும் வெப்பமும் நீண்டநேரப் பகலும்
உறங்காப் பொழுதுகளை அதிகரித்து
அவசர மருத்துவ வண்டிகளை
அடிக்கடி சாலைகளில் அலறவிட்டு
வயதானவர்களைச் சுருட்டிப் போட்டுள்ளன.
வயது வந்தோர் வெப்பம் தணிக்க கடல் குளியலுக்குச் செல்ல
பாட்டி தாத்தாக்கள் தனிமையில் வாட
ஆலயங்களில் ஆளில்லாக் காட்சி
ஆண்டவனுக்கும் கோடை விடுமுறையோ என்று
ஆதங்கப்பட வைக்கின்றது.
இறைவனுக்கு இடமில்லை என்றவர் வாழ்வு
அடியோடு அழிந்தது வரலாறு.
இறைவனுக்கு விடுப்புக் கொடுத்தால்
வீணாய்ப் போகும் மனிதர் வாழ்வு
இறைவன் விடுப்பில் சென்றால்.....








All the contents on this site are copyrighted ©.