2012-07-09 16:48:47

இலங்கையின் வடபகுதிக்கு உதவிகள் குறைகின்றன: ஐநா நிறுவனங்கள் கவலை


ஜூலை09, 2012. இலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், போர் இடம்பெற்ற பகுதிகளில் இன்னும் இயல்புநிலைத் திரும்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டின் வடபுலத்திற்கான சர்வதேச உதவிகள் குறைந்துவருகின்றமை கவலையளிக்கின்றது என்று கூறும் ஐ.நா.வின் மனிதாபிமான உதவிகளுக்கான இணைப்பு அலுவலகம், வடபகுதியின் மனிதாபிமான உதவிப் பணிகளுக்கென ஐநா மற்றும் அதனுடன் இணைந்து உழைக்கும் நிறுவனங்களுக்கு 147 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி தேவைப்படுவதாக சனவரி மாதத்திலேயே கோரியிருந்த போதிலும், இதில் பதினேழரை விழுக்காடான 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே கிடைத்திருப்பதாகத் தெரிவிக்கின்றது.
அதேவேளை, வடபகுதியில் மூன்று இலட்சம் பேருக்கு நிவாரண உணவு உதவிகளை வழங்கும் உலக உணவுத் திட்டமும் நிதிப்பற்றாக்குறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.