2012-07-05 16:25:32

தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பாகிஸ்தான் அரசின் முக்கியமான, அவசரமான தேவை - பாகிஸ்தான் ஆயர்


ஜூலை,05,2012. தேவநிந்தனைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது பாகிஸ்தான் அரசின் முக்கியமான, அவசரமான தேவை என்று பாகிஸ்தான் ஆயர் Rufin Anthony கூறினார்.
புனித குரானின் ஒரு பிரதியை வெளிப்படையாக எரித்தார் என்ற தேவநிந்தனை குற்றச்சாட்டின் பேரில், பஞ்சாப் மாநிலம் பஹாவல்பூர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவரை, ஆத்திரமடைந்த கூட்டம் ஒன்று இச்செவ்வாயன்று பிடித்துச் சென்று எரித்து கொலை செய்துள்ளது.
இவ்வன்முறையைக் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த Islamabad-Rawalpindi ஆயர் Rufin Anthony, இந்தச் சட்டத்தினால் இன்னும் எத்தனை அப்பாவி உயிர்கள் பலியாக வேண்டும் என்ற கேள்வியை எழுப்பினார்.
மனநிலை சரியில்லாதவர் என்று கூறப்படும் அந்த நபரைத் தாங்கள் அடையாளம் காண முயன்று வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். எனினும் இந்த வன்முறை தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.