2012-07-05 15:35:37

கவிதைக்கனவுகள்....... உன்னை நீயே கேட்டுக் கொள்


மனித உரிமை என்றொரு சொல்
மனதில் என்றும் நிற்பது உண்மை
மறந்து அதனைக் கடைப்பிடிப்போர்
மண்னில் எத்தனை பேர் ?

மனித உரிமை என்பது
மீறப்படுவது அரசியல்வாதிகளால்
மட்டும் அல்லவே .....
மனிதர் என்று கூறிக்கொண்டு
மனிதம் நிறைந்தோர் என்றே
மனதில் நான் என்னும் மமதை கொண்டு
மண்ணில் நடப்பதும் நிச்சயம்
மனித உரிமை மீறலே ....

நாளைய உலகின் விடிவெள்ளி
நட்சத்திரங்களாய் மின்னும்
நம் வருங்காலச் சந்ததியின்
நலமான வாழ்வை மறுக்கும்
ஒவ்வொரு செயலும் மனித உரிமைக்கு
ஒவ்வாத செயலே...

கண்ணியமான வாழ்வமைக்க
கண்ணீரன்றி எதுவுமற்ற
கன்னியர் பலரின் வாழ்வை
காளையர் சிதைக்கும் வரதட்சணை
அதுவும் கூட மனித உரிமை
அடிப்படை மீறலே....

மனித உரிமைகள் எங்கே
மீறப்படுகின்றன என்ற தேடலை
மறந்து விட்டு.. நண்ப உன்னுள்ளே
மானசீகமாய் மறைந்திருக்கும்
மனிதத்தைத் தேடு (வார்ப்பு என்ற இணைய பக்கத்தில் சத்தி சக்திதாசன் என்பவர் பதித்துள்ள கவிதை)








All the contents on this site are copyrighted ©.