2012-07-04 15:45:32

குழந்தைகளின் விவிலியப் பிரதிகள் 5 கோடியைத் தாண்டியது


ஜூலை,04,2012. அவரவர் தாய்மொழியில் வெளியிடப்பட்டுள்ள விவிலியம் பல இலட்சம் குழந்தைகளுக்குப் பெரும் பரிசாக அமைந்துள்ளது என்று Aid to the Church in Need என்ற கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவர் கூறினார்.
Aid to the Church in Need அமைப்பின் முயற்சியால் குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வகையில் விவிலியங்கள் பல்வேறு மொழிகளில் அச்சிடப்பட்டன.
1979 ம ஆண்டு ஆரம்பமான இந்த முயற்சியால், 172 மொழிகளில் விவிலியங்கள் வெளியாகின. இந்த முயற்சியின் ஒரு மைல்கல்லாக, இதுவரை வெளியான விவிலியங்கள் 5 கோடியை அண்மையில் தாண்டியது.
"இறைவன் தன் குழந்தைகளுடன் பேசுகிறார்" என்ற தலைப்பில் ஜெர்மன் மொழியில் முதன் முதல் வெளியான விவிலியம், நடப்பு ஆண்டில் மேலும் 23 புதிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மேலும் 10 இலட்சம் பிரதிகள் பிரசுரமாகும் என்று Aid to the Church in Need அமைப்பு அறிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.