2012-07-04 15:45:44

கிராமத்திற்குத் தேவையான முடிவெடுக்க பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு பொறுப்பும் அதிகாரமும் உண்டு - இந்தியாவின் உச்ச நீதி மன்றம்


ஜூலை,04,2012. ஒவ்வொரு கிராமத்திற்கும் தேவையானவைகளை முடிவெடுக்க பஞ்சாயத்து அமைப்புக்களுக்கு பொறுப்பும் அதிகாரமும் உண்டு என்று இந்தியாவின் உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவா மாநிலத்தில் உள்ள Calangute என்ற கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்ட வர்த்தகத் திட்டங்களுக்கு எதிராக அக்கிராமத்தின் பஞ்சாயத்து தடைவிதித்தது. பஞ்சாயத்து விதித்த தடை செல்லாது என்று அங்கிருந்த அரசு அதிகாரிகள் கூறியதைத் தொடர்ந்து, அப்பஞ்சாயத்து மும்பை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது.
பஞ்சாயத்துக்கு தடை விதிக்க அதிகாரமில்லை என்று மும்பை உயர் நீதி மன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, Calangute பஞ்சாயத்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த G.S.Singhvi, S.J.Mukhopadhya என்ற உச்ச நீதி மன்ற நீதிபதிகள் அடங்கியக் குழு, தங்கள் கிராமத்தின் நலத்திற்கென முடிவுகள் எடுக்க பஞ்சாயத்து அமைப்பிற்கு முழு உரிமை உண்டு. நல்ல முறையில் செயல்படும் பஞ்சாயத்துக்கள் இந்திய அதிகாரத் துறையின் முக்கிய ஓர் அங்கம் என்று தீர்ப்பளித்தது.








All the contents on this site are copyrighted ©.