2012-07-04 15:44:14

இலங்கையில் மட்டக்கிளப்பு என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி, ஆயர் ஜோசப் பொன்னய்யா அவர்களை முதல் ஆயராக நியமித்தார் திருத்தந்தை


ஜூலை,04,2012. ஜூலை 3 இச்செவ்வாயன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இலங்கையில் மட்டக்கிளப்பு என்ற புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி, ஆயர் ஜோசப் பொன்னய்யா அவர்களை அம்மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமித்தார்.
திரிகோணமலை-மட்டக்களப்பு மறைமாவட்டத்திலிருந்து, தனியாகப் பிரிக்கப்பட்டுள்ள மட்டக்கிளப்பு மறைமாவட்டத்தில் மட்டக்கிளப்பு, அம்பாரா ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.
11 இலட்சத்துக்கும் அதிகமான மக்களைக் கொண்ட இந்த மறைமாவட்டப் பகுதியில் 55225 கத்தோலிக்கர்கள் உள்ளனர். 24 பங்குத்தளங்களை உள்ளடக்கிய இப்புதிய மறைமாவட்டத்தில் 35 மறைமாவட்ட குருக்களும், 97 இருபால் துறவியரும் பணி செய்கின்றனர்.
இப்புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்கும் ஆயர் ஜோசப் பொன்னய்யா, 1952ம் ஆண்டு Thannamunai எனுமிடத்தில் பிறந்தார். 1980ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், 2008ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, திரிகோணமலை-மட்டக்கிளப்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
ஜூலை 3, இச்செவ்வாயன்று ஆயர் ஜோசப் பொன்னையா, புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மட்டக்கிளப்பு மறைமாவட்டத்தின் முதல் ஆயராக திருத்தந்தையால் நியமிக்கப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.