2012-07-03 14:34:37

ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பது காங்கோ திருஅவையின் முதன்மையான மறைப்பணியாக கர்தினால் - Filoni


ஜூலை03,2012. ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பது காங்கோ திருஅவையின் முதன்மையான மறைப்பணியாக இருக்கின்றது என்று திருப்பீட விசுவாசப்பரப்பு பேராயத் தலைவர் கர்தினால் Fernando Filoni கூறினார்.
ஆப்ரிக்க நாடான காங்கோவுக்கான அப்போஸ்தலிக்கச் சுற்றுப்பயணத்தை இஞ்ஞாயிறன்று தொடங்கியுள்ள கர்தினால் Filoni, தலைநகர் Kinshasa அன்னைமரியா பேராலயத்தில் நிகழ்த்திய திருப்பலியில் இவ்வாறு கூறினார்.
காங்கோ மக்களை விசுவாசத்தில் உறுதிப்படுத்தி இம்மக்கள் மீது திருத்தந்தை கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்தும் நோக்கத்தில் இப்பயணத்தைத் தான் மேற்கொண்டுள்ளதாகவும் கர்தினால் கூறினார்.
சமூக அநீதிகள், மனித உரிமை மீறல்கள், முடிவடையாத சண்டையினால் பாகுபாடின்றி நடத்தப்படும் வன்முறைகள், பாதுகாப்பின்மை ஆகியவற்றுக்கு இந்நாட்டு மக்கள் பலர் பலியாகியுள்ளார்கள் என்றும் கூறினார் கர்தினால்.
வறுமை, நோய், வெறுப்பு, பிளவுகள் ஆகியவை குடும்பங்கள் மற்றும் தனிமனிதரின் துன்பங்களுக்குக் காரணங்களாக உள்ளன என்றும் உரைத்த கர்தினால் Filoni, ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியை ஊக்குவிப்பது காங்கோ திருஅவையின் முதன்மையான மறைப்பணியாக இருக்கின்றது என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.