2012-07-03 14:35:42

இலங்கைக்கு நிதியுதவி வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடம்


ஜூலை03,2012. இலங்கைக்கு நிதியுதவிகளை வழங்கிய நாடுகளில் கடந்த ஆண்டில் சீனா முன்னிலை வகித்தவேளை, தற்போது அந்த இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.
2012ம் ஆண்டின் முதல் 4 மாதங்களில் இலங்கைக்கு மொத்தம் 101 கோடியே 50 இலட்சம் டாலர் வெளிநாட்டு நிதியுதவிகள் கிடைத்துள்ளதாக இலங்கையின் அதிகாரபூர்வப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இதில் இந்தியா மட்டும் 74 கோடியே 8 இலட்சம் டாலரை இலங்கைக்கு வழங்கியுள்ளது. இதில் 27 கோடியே 51 இலட்சம் டாலர் நன்கொடையாகும்.
இலங்கையின் அண்மைய வரலாற்றில் வழக்கத்துக்கு மாறாக கிடைத்துள்ள மிகப்பெரிய நன்கொடை இதுவாகும்.
இதன்மூலம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் 49,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.
12.6 மில்லியன் டாலர் நன்கொடை உள்ளிட்ட 175.3 மில்லியன் டாலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்கியுள்ளது ஜப்பான்.
மூன்றாவது இடத்தில் நெதர்லாந்து உள்ளது. இந்த நாடு 102.5 மில்லியன் டாலரை நிதியுதவியாக அளித்துள்ளது.
கடந்த ஆண்டில் முதலிடத்தில் இருந்த சீனா இம்முறை நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. சீனா இந்த ஆண்டில் 32.5 மில்லியன் டாலரையே, இலங்கைக்கு வழங்கியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.