2012-06-29 15:43:01

சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஐ.நா. அழைப்பு


ஜூன் 29,2012. சித்ரவதைக்கு உள்ளானவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்கும் சித்ரவதைத் தண்டனைகளை நிறுத்துவதற்கும் ஐயத்திற்கு இடமளிக்காத தெளிவானத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்று ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டார்.
மனிதத்தைச் சிதைக்கும் இந்தச் சித்ரவதையைத் தடைசெய்யும் அனைத்துலக ஒப்பந்தம் அமலுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகியிருந்தாலும், பெண்களும் ஆண்களும் சிறாரும் தங்களது மனித மாண்பை இழக்கும் சித்ரவதைகளையும் முறைகேடாக நடத்தப்படுவதையும் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிறார்கள் என்றும் பான் கி மூன் கூறினார்.
இந்த அனைத்துலக உடன்பாடானது 1987ம் ஆண்டு ஜூன் 26ம் நாளன்று அமலுக்கு வந்தது. 1997ம் ஆண்டில் இந்தியா இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டிருந்தாலும் அதனை அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் அது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை என்று கூறப்படுகின்றது.
ஆண்டுதோறும ஜூன் 26ம் நாளன்று சித்ரவதைக்கு உள்ளானோருக்கு ஆதரவு வழங்கும் அனைத்துலக தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.