2012-06-29 15:39:48

கவிதைக் கனவுகள் - மனிதர்: புரட்சிக்கவி பாரதிதாசன்


மஞ்சம் திருத்தி - உடை
மாற்றி யணிந்தே - கொஞ்சம்
கொஞ்சிக் குலாவிட நாதம் வரும்படி
கோதை அழைக்கையிலே,
மிஞ்சிய சோகம் - மிக
மிஞ்சிய அச்சம் - 'என்
வஞ்சியும் பிள்ளையும் நானிறந்தால் என்ன
வாதை கொள்வாரோ'
நெஞ்சிலிவ் வாறு - நினைந்
தக்குரைக் கின்றான்: - 'அடி
பஞ்சைப் பரம்பரை நாமடி! பிள்ளைகள்
பற்பலர் ஏதுக் கென்பான்
காஞ்சி பறித்தார் - எழுங்
காதல் பறித்தார் - கேட்ட
வஞ்சகம் சேர்சின்ன மானிடச் சாதிக்கு
வாய்த்த நிலை இதுவோ!'







All the contents on this site are copyrighted ©.