2012-06-29 15:41:51

இரு இந்தியர்கள் உட்பட 44 பேராயர்களுக்குத் திருத்தந்தை Pallium வழங்கினார்


ஜூன்,29,2012. ஜூன் 29 இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனிதர்கள் பேதுரு பவுல் பெருவிழாவன்று காலை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் நிகழ்ந்த ஆடம்பர கூட்டுத் திருப்பலியில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 44 பேராயர்களுக்கு Pallium என்ற கழுத்துப் பட்டையை அணிவித்தார். இன்னும் இரு பேராயர்கள் காலம் தாழ்த்தி இதனைப் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையுடன் கொண்டிருக்கும் தனிப்பட்ட உறவுக்கு அடையாளமாய் விளங்கும் இந்தக் கழுத்துப் பட்டையைப் பெறும் பேராயர்களில் 22 பேர் அமெரிக்க நாடுகளையும், 9 பேர் ஆசியாவையும், 8 பேர் ஐரோப்பாவையும் 4 பேர் ஆப்ரிக்காவையும், 3 பேர் ஒசியானாப் பகுதியையும் சார்ந்தவர்கள்.
நாடுகள் என்ற வரிசையில், பிரேசில் நாட்டிலிருந்து 7 பேரும், அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, இவ்விரு நாடுகளிலிருந்து 4 பேரும் இக்குழுவில் அடங்குவர்.
ஆசியாவின் 9 பேராயர்களில் நால்வர் பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்தும், இருவர் இந்தியாவில் இருந்தும், பாகிஸ்தான், பங்களாதேஷ், கொரியாவிலிருந்து ஒரு பேராயரும் Pallium பெற்றனர்.
இந்தியாவின் குவஹாத்தி பேராயர் John Moolachira அவர்களும், கொல்கத்தா பேராயர் Thomas D’Souza அவர்களும் இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் கரங்களிலிருந்து Pallium என்ற கழுத்துப் பட்டைகளைப் பெற்றனர்.








All the contents on this site are copyrighted ©.