2012-06-28 15:37:06

கவிதைக் கனவுகள் - ஆயுதம் ... மறதி


பாதை முள்
படுக்கை முள்
இருக்கை முள்
வாழ்க்கை முள்
ஆன மனிதர்களைப் பார்த்துச்
சிலிர்த்துக் கொண்டது
முள்ளம்பன்றி. . .
ஓ இவர்களுக்குத் தெரியாதா
முள்ளும் ஓர்
ஆயுதம் என்று !
இது கவிஞர் மீராவின் சிந்தனை

விலங்குக்குத் தெரியும் உண்மை
மனிதருக்கு மறந்து போகின்றது.
மனிதர் மறக்க வேண்டியது ஏராளம் ஏராளம்
பிறருக்குச் செய்த உதவிகளை
பிறர் சுமத்திய பழிகளை
நண்பர்களின் நம்பிக்கை துரோகத்தை
உதவி பெற்றவரின் அலட்சியப் போக்கை…….
இப்படி மறக்க வேண்டியது பல பல...
ஆனால்...
மறதி என்ற இலவசக் கொடை
வாழ்க்கை முள்ளும் மலரும் என்பதை
நம்புவதற்கு நம்மைப் பழக்கப்படுத்துகிறது
வாழ்க்கைமீது பிடிப்பை ஏற்படுத்துகின்றது
வருங்காலம் ஒன்று உள்ளது என்பதை
நம்ப வைக்கின்றது.
மறதியும் ஒருவகையில் நன்மையே








All the contents on this site are copyrighted ©.