2012-06-27 17:03:02

உண்மையையும், அன்பையும் வளர்க்கும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் - மலேசிய ஆயர் பேரவையின் தலைவர்


ஜூன்,27,2012. மலேசியாவில் நிலவும் ஊழலையும், பாகுபாடுகள் நிறைந்த செயல்பாடுகளையும் கண்காணிக்க, அரசு உருவாக்கியுள்ள 'உண்மை, ஒப்புரவு கண்காணிப்புக் குழு'வை தலத் திருஅவை வரவேற்றுள்ளது.
உண்மையும், அன்பும் மனிதர்களின் அடிப்படை குணங்கள். அவைகளை வளர்க்கும் எந்த முயற்சியும் வரவேற்கப்படவேண்டும் என்று மலேசியா, சிங்கப்பூர், புருனே ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்த ஆயர் பேரவையின் தலைவரான ஆயர் Paul Tan Chee Ing, கூறினார்.
அரசின் நடவடிக்கைகளில் ஒளிவு மறைவற்ற வழிமுறைகள் அமைய, மலேசிய மக்கள் அரசை வற்புறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சென்ற ஆண்டு 'Berish' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.
இவ்வமைப்பினரின் தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக 'உண்மை, ஒப்புரவு கண்காணிப்புக் குழு'வை அரசு உருவாக்கியுள்ளது என்று Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
Berish மேற்கொண்ட முயற்சிகள் தகுந்த பலனை அளித்துள்ளது என்று இயேசு சபையைச் சேர்ந்த ஆயர் Paul Tan, Fides நிறுவனத்திடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.