2012-06-25 11:52:42

கவிதைக் கனவுகள் .... வியர்வைத்துளிகள்


கல்உடைக்கும் உழைப்பாளி
களத்தில் உழும் விவசாயி
சுமைதூக்கும் நாள்கூலி
சுத்தம் செய்யும் தெருக்கூட்டி
இவர்கள் சிந்தும் வியர்வைத்துளிகள்
இலக்கில் சிந்தை வைத்து சிந்தப்படுகின்றன
மண்ணை நனைக்கும் இவ்வியர்வைச் சொட்டுகள்
மனதைக் குளிரவைக்கும் ஒருநாளில்
என்ற எண்ணத்தில் சிந்தப்படுகின்றன
எண்ணத்தில் உதித்த இலக்கு
எட்டப்படா நிலையில்
துன்பம் இரத்த வியர்வைகளாகச் சொட்டுகின்றன.
உழைத்துச் சிந்திய வியர்வையில்
உறைவிடம் முழுவதும் பொருள்கள் –ஆனால்
உள்ளத்தில் இன்பம் இல்லை.
ஆறுதலுக்குத் தோள்சாய்க்க யாருமில்லை
அன்பாக அணைத்துக்கொள்வாரில்லை
சொல்கிறார்கள்
இன்பம் வரும்போது சிரிப்பை குறைத்துக்கொள்
துன்பம் வரும்போது அழுகை குறையும் என்று.
கடந்ததையே சிந்தனை செய்து
கவலை எனும் குழிக்குள் அமுங்கிப் போகாதே.
இன்றைய நாள், புதிய நாள்
இச்சிந்தனையோடு நாளைத் தொடங்கு என்று.








All the contents on this site are copyrighted ©.