2012-06-21 16:10:56

Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டிற்கு ஐரோப்பிய ஆயர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை


ஜூன்,21,2012. இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படும் சரிநிகரான, நீடிக்கக்கூடிய முன்னேற்றத்தை Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டில் உலகத் தலைவர்கள் காண வேண்டும் என்று ஐரோப்பிய ஆயர்கள் கூறியுள்ளனர்.
பிரேசில் நாட்டில் இப்புதனன்று துவங்கியுள்ள Rio+20 பூமிக்கோள உச்சி மாநாட்டையொட்டி ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆயர் பேரவைகள் இணைந்து வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், வறுமைப்பட்ட நாடுகளின் அவசரத் தேவைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
உணவு, சுத்தமான தண்ணீர், எரிசக்தி, நலவாழ்வுப் பாதுகாப்பு, கல்வி ஆகிய அடிப்படைத் தேவைகள் உலகின் கோடிக்கணக்கான மக்களைச் சென்றடைவதற்கு இம்மாநாடு முயற்சிகள் செய்யவேண்டும் என்று இவ்வறிக்கை எடுத்துரைக்கிறது.
முன்னேற்றம் என்பது, வறுமையை ஒழிப்பதும், செல்வம் சேர்ப்பதும் மட்டும் அல்ல, மாறாக, வளர்ச்சி அடைந்த, செல்வம் மிகுந்த நாடுகள் மனசாட்சியுடன் செயல்படுவதும் முன்னேற்றத்தின் முக்கிய அம்சங்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள ஆயர் பேரவைகள் இணைந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கை கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.