2012-06-20 16:27:47

நிலத்தடிக் கல்லறைகளைச் சீரமைக்கும் பணிக்கு ஓர் இஸ்லாமிய நாடு உதவி செய்ய முன்வந்திருப்பது வரலாற்றில் முதல் முறை - வத்திக்கான் அதிகாரி


ஜூன்,20,2012 கிறிஸ்துவர்களின் பழங்கால நிலத்தடிக் கல்லறைகளைச் சீரமைக்கும் பணிக்கு ஓர் இஸ்லாமிய நாடு உதவி செய்ய முன்வந்திருப்பது இதுவே வரலாற்றில் முதல் முறை என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
உரோம் நகரின் Casalina பகுதியில் அமைந்துள்ள புனித மார்செலினுஸ் மற்றும் பேதுரு நிலத்தடிக் கல்லறைகளைச் சீரமைக்கும் பணிகளுக்கு Azerbaijan குடியரசு முன்வந்துள்ளது.
இந்நாட்டின் Heydar Alieyev என்ற அறக்கட்டளைக்கும், வத்திக்கானுக்கும் இடையே வருகிற வெள்ளியன்று ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த நிகழ்வைப்பற்றி செய்தியாளர்களிடம் பேசியத் திருப்பீடக் கலாச்சார அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, இந்த ஒப்பந்தம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு என்று குறிப்பிட்டார்.
கலாச்சாரங்களுக்கு இடையே நடைபெறும் உயர்ந்த உரையாடல்களின் ஒரு வெளிப்பாடாக இதையொத்த முயற்சிகள் அமைகின்றன என்று கர்தினால் Ravasi தன் மகிழ்வை வெளியிட்டார்.








All the contents on this site are copyrighted ©.