2012-06-20 16:41:52

கவிதைக் கனவுகள் - தூக்கம் கலைவது எப்போது?


என்ன செய்து என்ன பயன்?
தலைவிதியை யார் மாற்றுவார்?
கேள்வி எழுந்து, சமூக மனசாட்சி
மௌன சாட்சியாகிறது. - இதனால்
வேடிக்கை பார்ப்பதே வாடிக்கையாகி
வாழ்க்கை முறையுமாகிறது.
எல்லாரும் திருடர்களே எனும் மனநிலை
வந்து நின்று நியாயப்படுத்துகிறது.
கண்டனங்கள் கூறியே காலம் விரயமாகிறது.
பயந்தும் பாதுகாப்புத் தேடியும்
சுயநலம் முன்னிலைப் பெறுகிறது.
படித்தவர் தயக்கமும் பாமரர் மயக்கமும்
ஆட்சியாளர் துருப்புச் சீட்டாகிறது.
கவருக்குள் காசு வைத்து ஞாபகம் மழுங்கடிக்கப்படுகிறது.
ஞாபகசக்தியற்றஒரு மக்கள் சக்தி
ஐந்தாண்டிற்கு ஒருமுறை விலைபோய்க்கொண்டிருக்கிறது
சிந்திக்கமறுத்ததால் சிந்தியகண்ணீர் மறுபடி தொடர்கிறது
எப்போது விழித்துக்கொள்வோம்?
யாரறிவார் பராபரமே.








All the contents on this site are copyrighted ©.