2012-06-20 16:28:18

Homs நகரில் சிக்குண்டிருக்கும் மக்களை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் -தலத்திருஅவை விண்ணப்பம்


ஜூன்,20,2012 சிரியாவில் அரசுக்கும் எதிர் தரப்பினருக்கும் இடையே நிகழ்ந்துவரும் மோதல்களில் அப்பாவி பொதுமக்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும், Homs நகரில் சிக்குண்டிருக்கும் மக்களை உடனடியாக விடுதலைச் செய்யவேண்டும் என்றும் தலத்திருஅவை விண்ணப்பித்துள்ளது.
சிரியாவின் Homs நகரில் சிக்கியுள்ள 800க்கும் அதிகமான அப்பாவி பொதுமக்கள், போரிட்டுவரும் இருதரப்பினரும் பயன்படுத்தக்கூடிய மனிதக் கேடயங்களாக மாறி வருகின்றனர் என்று Fides செய்தி கூறியது.
இம்மக்களில் பாதிக்கு மேல் கிறிஸ்தவர்கள் என்றும், இவர்கள் அனைவரும் பெண்கள் மற்றும் வயதானவர்கள் என்றும் அருள்தந்தை Boutros Al Zein, Fides செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
அப்பகுதியில் உழைத்துவரும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ அருள்பணியாளர்கள் இம்மக்களை விடுவிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ளதென்றும் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.