2012-06-16 16:15:44

மனநலம் பாதிக்கப்பட்டவர்க்கு எதிரான உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதற்கு ஐ.நா. முயற்சி


ஜூன்16,2012. மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளையும் மாண்பையும் காப்பதற்கும், அவர்களுக்கு எதிரான உரிமை மீறல்கள் நிறுத்தப்படுவதற்கும் உதவும் புதிய வழிகாட்டிகளை வழங்கியுள்ளது உலக நலவாழ்வு நிறுவனம்.
பல இடங்களில், குறிப்பாக வருவாய் குறைவான நாடுகளில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் மீறப்படுகின்றன, அவர்களுக்கான சமூகநல வசதிகள் மோசமான நிலைகளில் உள்ளன என்று அந்நிறுவனத்தின் மனநலப் பிரிவின் இயக்குனர் Shekar Saxena கூறினார்.
தற்போது தயாரிக்கப்பட்டுள்ள Tool Kit என்ற வழிகாட்டி கையேடு, 2006ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.