2012-06-16 16:15:02

துன்பங்களின் அர்த்தம் குறித்து ஈராக் பேராயர் வார்தா


ஜூன்16,2012. துன்பங்கள் எப்போதும் மனிதத்தன்மையைச் சீர்குலைக்கின்றன என்று ஈராக்கின் Erbil கல்தேய ரீதி பேராயர் Bashar Warda கூறினார்.
அயர்லாந்து நாட்டு டப்ளினில் நடைபெற்று வரும் 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாட்டில், “துன்பங்கள் மற்றும் குணப்படுத்தலில் ஒன்றிப்பு” என்ற தலைப்பில் உரையாற்றிய பேராயர் Warda, இன்றைய சமூகத்தில் மக்களைப் பாதிக்கும் பல்வேறு வகையான துன்பங்கள் பற்றிப் பேசினார்.
மனிதத் துன்பங்கள் பற்றிப் பேசும்போதெல்லாம் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களே முதலில் நம் கண்முன் வருகின்றன என்றும் உரைத்த பேராயர், அவர் சிலுவையில் தொங்கிய வேளையிலும் ஒன்றிப்பை உருவாக்கினார் என்று கூறினார்.
இம்மாதம் 10ம் தேதி தொடங்கிய 50வது அனைத்துலக திருநற்கருணை மாநாடு, இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.







All the contents on this site are copyrighted ©.