2012-06-16 16:15:15

சிரியாவை மறக்கவோ கைவிடவோ கூடாது : அருள்தந்தை லொம்பார்தி


ஜூன்16,2012. கடந்த 15 மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்று வரும் சிரியாவில் எல்லா வயதுடைய அப்பாவி மக்களும் எல்லா மதத்தினரும் தொடர்ந்து கொல்லப்பட்டுவரும்வேளை, அந்நாடு உள்நாட்டுப் போரை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என மக்கள் எண்ணத் தொடங்கி விட்டார்கள் என்று இயேசு சபை அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி கூறினார்.
“சிரியாவில் ஓர் இருளான இரவு” என்ற தலைப்பில் வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில் உரையாற்றிய அருள்தந்தை லொம்பார்தி, முஸ்லீம் உலகத்தின் பல பிரிவுகளோடும், கிறிஸ்தவ சபைகளோடும் நல்லுறவில் இருந்துவந்த சிரியா, தற்போது வன்முறையிலும் குழப்பத்திலும் சிக்குண்டுள்ளது என்று கவலை தெரிவித்தார்.
திருத்தந்தை, பல்வேறு சமயத் தலைவர்கள், நாடுகளின் தலைவர்கள் போன்றோர் விடுத்த தொடர்ந்த அழைப்புக்குச் சிரியா அரசு சரியாகச் செவிசாய்க்கவில்லை என்றும், சர்வதேச அளவிலான ஆயுதத் தலையீடு ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பது மிகவும் கவலையளிக்கின்றது என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
விசுவாசிகளாகிய நாம் தற்போது சிரியா மீது பரிவு கொண்டு அந்நாட்டுக்காகச் செபிப்போம், துன்புறுவோருக்கு உதவிகள் செய்வோம், நாம் சிரியாவை மறக்கவோ கைவிடவோ கூடாது என்று கேட்டுக் கொண்டார் அருள்தந்தை லொம்பார்தி.







All the contents on this site are copyrighted ©.