2012-06-15 16:07:59

சிரியா இராணுவம் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்கின்றது, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் புகார்


ஜூன்15,2012. சிரியாவில் சட்டத்துக்குப் புறம்பே கொலைகளும், சித்ரவதைகளும், திட்டமிட்ட கைதுகளும், வீடுகள் பாகுபாடற்று அழிக்கப்படுவதும் இடம்பெறுகின்றன என்று ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்ற பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியா இராணுவம் மனித சமுதாயத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்கின்றது என்று குறை கூறும் ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், அந்த இராணுவம் செய்துவரும் குற்றங்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதால் அக்குற்றங்கள் பெருகி வருகின்றன என்று கூறியது.
சிரியா இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல்கள் நிறுத்தப்படுவதற்குச் சர்வதேச சமுதாயம் தலையிடுமாறும் அக்கழகம் கேட்டுள்ளது.
மேலும், சீனாவில் ஒரு குழந்தை கொள்கையின்கீழ் இடம்பெறும் கட்டாயக் கருக்கலைப்புக்கள், சிரியாவில் பெண்களும் குழந்தைகளும் கொல்லப்படுவது போன்று இருக்கின்றது என்று ஊடகங்கள் குறை கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.