2012-06-08 16:49:51

ஒருவர் மற்றவரோடு கொள்ளும் உறவே இறைவனின் திருப்பந்தியை முழுமை அடையச் செய்கிறது - கர்தினால் Kurt Koch


ஜூன்,08,2012. கிறிஸ்துவின் திருஉடலை உட்கொள்ளும் ஒவ்வொருவரும் அவருடன் தனிப்பட்ட முறையில் இணைவது மட்டுமல்லாமல், கிறிஸ்துவின் உடலைப் பகிர்ந்துகொள்ளும் ஏனைய விசுவாசிகள் அனைவரோடும் நாம் இணைகிறோம் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அயர்லாந்தின் டப்ளின் நகரில் இஞ்ஞாயிறன்று ஆரம்பமாகவிருக்கும் அகில உலக திருநற்கருணை மாநாட்டிற்கு முன், Maynooth எனுமிடத்தில் இப்புதன் முதல் சனிக்கிழமை முடிய நடைபெற்றுவரும் ஒரு கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய கிறிஸ்தவ ஒருமைப்பாட்டுத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Kurt Koch இவ்வாறு கூறினார்.
"ஒருமைப்பாட்டின் திருஅவை இயல் : இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் துவங்கி 50 ஆண்டுகள்" என்ற தலைப்பில் Maynoothல் நடைபெற்றுவரும் இறையியல் கருத்தரங்கில் உரையாற்றிய கர்தினால் Koch, திருநற்கருணை என்ற அருட்சாதனமே திருஅவையின் ஒருமைப்பாட்டிற்கு மிகவும் சிறந்ததோர் அடையாளம் என்று எடுத்துரைத்தார்.
இறைவனுடன் நாம் கொள்ளும் திருப்பந்தி உறவு தனிப்பட்ட உறவு அல்ல, மாறாக ஒருவர் மற்றவரோடு கொள்ளும் உறவே இந்தத் திருப்பந்தியை முழுமை அடையச் செய்கிறது என்பதை கர்தினால் Koch தன் உரையில் வலியுறுத்தினார்.








All the contents on this site are copyrighted ©.