2012-06-07 11:56:55

கவிதைக் கனவுகள் .... ஆன்மீகவாதி


அமெரிக்க ஐக்கிய நாட்டில் அடிமைமுறையை
அஞ்சாது எதிர்த்தவர்
அமெரிக்க ஐக்கிய நாட்டை உருவாக்க
அயராது உழைத்தவர்
அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவராக இருந்தவர்
உன்னத உழைப்புக்காகச் சுட்டு வீழ்த்தப்பட்டவர்
ஆபிரகாம் லிங்கன்.
அன்று மிடுக்கான ஆடையுடன் சென்று கொண்டிருந்த
லிங்கனின் கண்ணில்பட்டது
சாக்கடையில் சிக்கித்தவித்தப் பன்றிக்குட்டி ஒன்று.
வாகனத்தைவிட்டு இறங்கினார்
பகட்டான ஆடையுடன் சாக்கடையில் இறங்கினார்
பன்றிக்குட்டியைக் காப்பாற்றினார்.
பார்த்தவரும் பார்க்காதவரும் பாராட்டினர்.
லிங்கன் இப்படிச் சொன்னார்..
பன்றிக்குட்டியைக் காப்பாற்றியிருக்காவிட்டால்
எனது மனசாட்சியே என்னைக் கொன்று போட்டிருக்கும்.
மனஅமைதிக்காக இச்செயலை நான் செய்ததும்
ஒருவகை சுயநலமே.
மனதிருப்திக்காகச் செய்யும் செயல்களில்கூட
ஒட்டியிருக்கிறது சுயநலம்.
மனிதர் கற்கவேண்டியது எவ்வித எதிர்பார்ப்புமற்ற பணியை.
சுவாமி விவேகானந்தர் சொன்னார்...
சுயநலமற்றவரே உன்னத ஆன்மீகவாதி
அவரே கடவுளுக்கு மிக நெருக்கமாக இருப்பவர்







All the contents on this site are copyrighted ©.