2012-06-06 15:38:24

திருத்தந்தை மிலான் நகரில் கூறிய 'அஞ்சாதீர்கள்' என்ற வார்த்தையை லிபியாவில் வாழும் கத்தோலிக்கர்களும் உணர வேண்டும் - Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி


ஜூன்,06,2012. அண்மையில் திருத்தந்தை மிலான் நகரில் கூறிய 'அஞ்சாதீர்கள்' என்ற வார்த்தையை லிபியாவில் வாழும் கத்தோலிக்கர்களும் உணர வேண்டும் என்று Tripoliயின் அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Giovanni Innocenzo Martinelli, கூறினார்.
அண்மையில் போராட்டக் குழுவினர் Tripoliயின் விமானத்தளத்தைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கு நிலவிய பதட்டநிலை இச்செவ்வாயன்று சீரடைந்ததைக் குறித்து Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்ட பேராயர் Martinelli, லிபியாவில் தொடர்ந்து அனைத்துத் தரப்பினரும் ஆயுதங்களைக் களைந்து உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
இம்மாதத்தின் மத்தியில் நடைபெறவிருக்கும் தேர்தல்கள் மீண்டும் தள்ளிவைக்கப்படலாம் என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய ஆயர் Martinelli, உரையாடல் ஒன்றே தங்கள் நாட்டிற்கு நீடித்தத் தீர்வைத் தரும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணரவேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.