2012-06-04 15:23:24

புற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், புதிய ஆய்வில் தகவல்


ஜூன் 04, 2012. தற்போது புற்றுநோய் தாக்கியவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும் போது 2030ஆம் ஆண்டில் 75 விழுக்காட்டினர் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் லியோன் நகரில் உள்ள சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் 184 நாடுகளில் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2008-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 1 கோடியே 27 இலட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர் எனவும், 2030-ம் ஆண்டில் 2 கோடியே 22 லட்சம் பேர் புற்று நோய் பாதிப்புக்குள்ளாவார்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
மிகவும் ஏழ்மையாக உள்ள நாடுகளில் புற்றுநோய்த் தாக்குதல் அதிகம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஏழை நாடுகளில் வாழும் மக்களின் அன்றாட வாழ்க்கை நடைமுறை, உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உரிய சிகிச்சை இன்மையே புற்றுநோய் அதிகரிப்புக்குக் காரணமாகும்.








All the contents on this site are copyrighted ©.