2012-06-04 15:32:52

பாகிஸ்தான் கத்தோலிக்க கோவிலின் ஜூபிலிக் கொண்டாட்ட ஒரு பகுதியாக இலவச மருத்துவ உதவி


ஜூன் 04, 2012. பாகிஸ்தானின் கராச்சி புனித அந்தோணியார் கோவில் தன் 75ம் ஆண்டை சிறப்பிக்க உள்ளதை முன்னிட்டு ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ உதவி வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் உட்பட ஏறத்தாழ 200பேர் இத்திட்டத்தின் முதல் நாள் மருத்துவ முகாமில் கலந்துகொண்டு மருத்துவ உதவிகளைப் பெற்றனர்.
குடும்பத்தைத் திட்டமிடாமை, இளவயது திருமணங்கள், பிள்ளைப் பேறுகாலப் பிரச்சனைகள், உயர் இரத்த அழுத்தம், இரத்தத்தில் சிகப்பணு குறைபாடு போன்றவைகளை இம்மக்களிடையே கண்டுணர்ந்து அதற்கேற்றாற்போல் மருத்துவ உதவிகளை வடிவமைத்துள்ளதாக அப்பங்குத்தள அவையின் அங்கத்தினர் Daphne Alfrey கூறினார்.
வைட்டமின், கால்சியம் மற்றும் இரும்புச் சத்து மாத்திரைகளை வாங்கும் அளவுக்கு மக்களிடம் போதிய வசதி இல்லை எனவும் கூறினார் அவர்.








All the contents on this site are copyrighted ©.