2012-06-04 15:26:33

பயங்கரவாதத்தைக் களைவது உலகின் முக்கிய கடமை - ஐ.நா. பொதுச் செயலர்


ஜூன் 04,2012 பயங்கரவாதத்தால் விளையும் வன்முறைகள் உலகின் பல பகுதிகளைப் பெருமளவில் பாதித்து வருகின்றது என்றும், இந்த நிலையை மாற்றுவது உலகின் முக்கிய கடமை என்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான திட்டங்களைச் செயல்படுத்தும் ஐ.நா.வின் UNCCT எனப்படும் அமைப்பு இஞ்ஞாயிறன்று சவுதி அரேபியாவின் Jeddahவில் நடத்திய ஓர் உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய பான் கி மூன் இவ்வாறு கூறினார்.
சவூதி அரேபிய அரசின் உதவியுடன் 2010ம் ஆண்டு துவக்கப்பட்ட UNCCT அமைப்பு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஐ.நா.வின் பொது அமர்வு 2006ம் ஆண்டு வெளியிட்ட உயர்மட்டத் தீர்மானங்களைச் செயல்படுத்தி வருகிறது.
பயங்கரவாதத்திற்கு நிதி உதவிகள் செய்யும் சட்டத்திற்குப் புறம்பான அமைப்புக்களை ஒவ்வோர் அரசும் அடையாளம் கண்டு, அவ்வமைப்புக்களைத் தடை செய்வது இன்றைய உலகின் அவசரத் தேவை என்று ஐ.நா.பொதுச்செயலர் அழைப்பு விடுத்தார்.








All the contents on this site are copyrighted ©.