2012-06-04 16:02:26

கவிதைக் கனவுகள் ...... குடும்பம்


குடும்பம். இங்கு
எங்கும் கிடைக்காத பாசம் கிடைக்கும்
பிரதிபலன் பாராப் பகிர்வு கிடைக்கும்
மறக்க முடியா மன்னிப்புக் கிடைக்கும்
கேட்காமலே உதவி கிடைக்கும்
தன்னலம் நோக்கா விட்டுக்கொடுத்தல் கிடைக்கும்
நெஞ்சுக்கினிய உறவுகள் கிடைக்கும்
தெவிட்டாத இன்பம் கிடைக்கும்
கேட்டதெல்லாம் கிடைக்கும்
வறுமையிலும் மகிழ்ச்சி கிடைக்கும்
விரும்பவதெல்லாம் கிடைக்கும்
இங்கு இன்னும் கிடைக்கும்....
ஊதாரி மகனை மனமாற்ற
அப்பாவின் அன்பு கிடைக்கும்
உதவாக்கரை மகனைக் கரைசேர்க்க
தாயின் தியாகம் கிடைக்கும்
அண்ணனை உயர்த்திப் பார்க்க
தங்கையின் உழைப்புக் கிடைக்கும்
அக்காவின் வாழ்வை வளமாக்க
தம்பியின் சேமிப்பு கிடைக்கும்.
குடும்பம். இங்கு கிடைக்காதது என்று எதுவும் கிடையாது
குடும்பத்தின்அன்பு வாழ்வின் மிகப்பெரும் ஆசீர்.
இங்கு இருப்பவர்கள் தாயின் வார்ப்புக்கள்.
குடும்பம் உலகில் முக்கியமானது








All the contents on this site are copyrighted ©.