2012-06-01 16:06:10

சமூகச் சந்தைப் பொருளாதாரத்துக்கு ஜெர்மன் கர்தினால் அழைப்பு


ஜூன்01,2012. கடந்த ஆண்டு முழுவதும் ஐரோப்பாவின் பெரும் பகுதியை முடக்கிப் போட்டிருந்த நிதிப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு சமூகச் சந்தைப் பொருளாதாரத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெர்மன் கர்தினால் Reinhard Marx.
உலகின் பொருளாதாரம் இன்னும் நியாயமான வழியில் நடத்தப்படுவதற்கு முதலீட்டையும் கடந்து செல்லக்கூடிய ஒரு பொருளாதாரம் தேவைப்படுகின்றது என்று வாஷிங்டன் ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் கூறினார் கர்தினால் Marx.
பொருளாதார நெருக்கடி, மாற்றத்திற்கான வாய்ப்பு என்றும் உரைத்த கர்தினால் Marx, 1989ம் ஆண்டில் நிகழ்ந்த புரட்சியை இந்த நெருக்கடிக்கு ஒரு முன் உதாரணமாகக் கூறலாம் என்றும், வரலாற்றுக்கு வெளியே நாம் செல்ல முடியாது, மாறாக அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென்றும் கூறினார்.
வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களைக் கிறிஸ்தவம் தனது பங்குக்கு உருவாக்கியுள்ளது எனவும், நீ உலகில் வாழ்ந்த போது உலகை நல்லதோர் இடமாக மாற்றினாயா என்று நமது இறுதித் தீர்வு நாளில் இயேசு கேட்பார் எனவும் ஜெர்மன் கர்தினால் Reinhard Marx கூறினார்.








All the contents on this site are copyrighted ©.