2012-05-30 16:06:26

24 ஆண்டுகள் காவலில் வைக்கப்பட்டிருந்த மியான்மாரின் எதிர்கட்சித் தலைவர் தாய்லாந்தில் பயணம்


மே,30,2012. கடந்த 24 ஆண்டுகள் மியான்மாரின் இராணுவ ஆட்சியால் காவலில் வைக்கப்பட்டிருந்த எதிர்கட்சித் தலைவர் Aung San Suu Kyi, முதன்முறையாக தன் நாட்டை விட்டு அண்மைய நாடான தாய்லாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் நடைபெறும் உலக பொருளாதாரக் கருத்தரங்கில் ஜூன் 1 ம் தேதி உரையாற்ற உள்ள Suu Kyi, அந்நாட்டிற்குச் சென்றதும், மியான்மாரில் இருந்து அந்நாட்டிற்குப் புலம்பெயர்ந்தோரை இப்புதனன்று சந்தித்தார்.
உலக அமைதிக்கான நொபெல் விருதைப் பெற்றுள்ள Suu Kyi, ASEAN நாடுகளில் வாழும் பெண்கள் எவ்வழிகளில் தங்களையே சக்திவாய்ந்தவர்களாக மாற்ற முடியும் என்ற கருத்தில் உலகப் பொருளாதாரக் கருத்தரங்கில் உரையாற்ற உள்ளார் என்று ஆசிய செய்தி நிறுவனம் கூறுகிறது.
தாய்லாந்தும் மியான்மாரும் வர்த்தகங்களில் கூட்டுறவு முயற்சிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள் அண்மையில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, Suu Kyiயின் பயணம் இவ்விரு நாடுகளுக்கிடையே உள்ள உறவை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.