2012-05-28 15:57:40

சூரிய ஒளி சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து ஜெர்மன் உலகச் சாதனை


மே,28,2012. சூரிய ஒளி சக்தி மூலம் மணிக்கு 22 ஜிகா வாட் மின் உற்பத்தி செய்து ஜெர்மன் நாடு உலகச் சாதனை படைத்துள்ளது. இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு ஈடு ஆகும்.
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரழிவிற்கு பின், தனது அணு மின் திட்டத்தைக் கைவிட்டு, சூரிய ஒளி மின் சக்தி தொழிலில் ஈடுபட்டுள்ளதன் மூலம் மின் தேவையினை பூர்த்தி செய்கிறது ஜெர்மனி.
இந்த ஆண்டு ஜெர்மனி, முதல்கட்டமாக 7.5 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யும் சூரிய ஒளி மின் உற்பத்தி மையத்தினை நிறுவி, அதில் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம் ஏற்படவே, ஒரு மணிக்கு 22 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.
இது 20 அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின் உற்பத்திக்கு சமம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நாட்டின் 50 விழுக்காடு மின்தேவையினை சூரிய ஒளி சக்தி மூலம் நிறைவு செய்து ஜெர்மனி சாதனை படைத்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.