2012-05-28 15:57:58

கவிதைக் கனவுகள் ... நா காக்க


எழுது எழுது என மனது உந்த
எழுதுகோலை கையில் எடுத்தால்
தொலைபேசி மணி அலறியது
இரண்டு அரைமணி நேரம்
தொலைபேசியில்....
தடயம் துண்டிக்கப்பட்டதும்
பரிமாறப்பட்ட பேச்சு மனதைத் துளைத்தது.
கட்டுப்படுத்தாத நாவில்
கடுஞ்சொற்கள், சுடு சொற்கள்..
நாவினால் சுட்டு நட்டப்பட வேண்டுமா?
சொற்களைக் கொட்டிவிட்டுப் பொறுக்க முயற்சிப்பதா?
ஆத்திரத்தில் அள்ளித் தெளித்து
சோகங்களை மூலதனமாக்க வேண்டுமா?
நிம்மதியை இழக்க வேண்டுமா?
வார்த்தைப் பரிமாற்றம் தந்த
அந்தநேரத் திருப்தி
காலமெல்லாம் பகையைச் சேமித்து விடுகின்றதே!
பிறரிடம் குற்றம் குற்றமாகக் கண்டு
நாவு பதம் பார்த்துக் கொண்டேயிருந்தால்
சுற்றம் உற்றம் எல்லாமும் மறைகின்றதே!.
குற்றமற்றவர் உண்டோ உலகில்!.
“பேச்சில் தவறாதோர் நிறைவுகாண்பர்.
தம் உடல் முழுவதையும் கட்டுப்படுத்த வல்லவர்....... ”
பெரிய காட்டை அழிக்கும் தீப்பொறிக்குச் சமம் நாவு.....
மறைநூல் வரிகள் இவை.
“எதைக் காக்காவிட்டாலும்
நாவைக் காப்பாற்றிக் கொள்”.
இது வள்ளுவர் அறிவுரை.








All the contents on this site are copyrighted ©.