2012-05-23 15:46:28

கர்தினால் பெர்தோனே: மழலை இதயங்கள் நலமாகத் துடிப்பதைக் காணும்போது, அறிவியல் முன்னேற்றங்கள் மீது நமது நம்பிக்கை கூடுகிறது


மே,23,2012. குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு அறிவியலும் மருத்துவமும் வளர்வது நம்பிக்கை தருகிறது என்று திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே கூறினார்.
16 மாதக் குழந்தைக்கு உலகிலேயே முதன்முறையாக மிக நுண்ணிய செயற்கை இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாகப் பொருத்திய குழந்தை இயேசு மருத்துவமனை மருத்துவர்களையும், உதவி செய்தோரையும் பாராட்டி கர்தினால் பெர்தோனே அனுப்பிய ஒரு செய்தியில் இவ்வாறு கூறினார்.சீரான இரத்த ஓட்டத்துடன் மழலைகளின் இதயங்கள் துடிப்பதைக் காணும்போது, எதிர்காலத்தின் மீதும், அதற்குத் துணை நிற்கும் அறிவியல் முன்னேற்றங்கள் மீதும் நமது நம்பிக்கை கூடுகிறது என்று கூறிய கர்தினால் பெர்தோனே, உரோம் நகரில் உள்ள குழந்தை இயேசு மருத்துவமனை, குழந்தைகள் நலனில் எப்போதும் முன்னணியில் உள்ளது என்பதைத் தன் செய்தியில் வலியுறுத்திக் கூறினார்.







All the contents on this site are copyrighted ©.