2012-05-21 15:10:28

உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது அதிகரிப்பு


மே 21,2012. உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என அண்மையில் வெளியிடப்பட்ட பிரிட்டன் அறிக்கை ஒன்று கூறுகிறது.
மேற்கத்திய நாடுகளில் பெண்கள் மது அருந்துவது சர்வ சாதாரணமான விடயம் எனினும், சாதாரணப் பணியில் இருப்போரை விட, மேலாளர் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் பிரிட்டன் பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்துவதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
நடுத்தர வர்க்கத்துப் பெண்களிடையே மது அருந்தும் வழக்கம் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது என்றும், அனைத்து வணிக வளாகங்களிலும் தற்போது மது கிடைப்பதால், பெண்கள் எளிதாக மதுவை வாங்கிச் சென்று வீட்டில் அருந்தும் நிலை உருவாகியுள்ளது என்றும், பிரிட்டன் நலத்துறை அமைச்சர் Diane Abbott கவலையை வெளியிட்டார்.
மது அடிமைகள் மறுவாழ்வு அமைப்பின் தலைவர் Ian Gilmore குறிப்பிடுகையில், வீட்டுப் பிரச்சனை, பணி புரியும் இடத்தில் உள்ள வேலைப் பளு ஆகியவற்றால் ஏற்படும் மன அழுத்தத்தைச் சமாளிக்க உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது அதிகரித்துள்ளது என்றார்.







All the contents on this site are copyrighted ©.