2012-05-18 15:48:50

தென் கொரியாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள் நிறுத்தப்படுவதற்குச் சமயத் தலைவர்கள் வேண்டுகோள்


மே 18,2012. தென் கொரியாவில் அதிகரித்து வரும் தற்கொலைகள் நிறுத்தப்படுவதற்கு விசுவாசிகள் உதவுமாறு, அந்நாட்டின் முக்கிய சமயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தென் கொரியாவின் Ssangyong வாகனத் தயாரிப்பு நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்து வருவதைக் குறிப்பிட்டுள்ள அத்தலைவர்கள், இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு அந்நாட்டினர் அனைவரும் சேர்ந்து செயல்படுமாறு கேட்டுள்ளனர்.
கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி ஆணையத் தலைவர் ஆயர் Matthias Ri Iong-hoon உட்பட அந்நாட்டின் முக்கிய மதத்தலைவர்கள் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
Ssangyong வாகனத் தயாரிப்பு நிறுவனம் தொடர்பாக 2009ம் ஆண்டிலிருந்து கடந்த மார்ச் வரை 2,646 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்று கூறப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.