2012-05-17 13:59:52

கவிதைக் கனவுகள் .... நட்பின் உயர்வு


மலர் வனத்தில்
வண்ண வண்ணமாய்
ரோஜாக்களின் கூட்டம்
இளம்சிவப்பும் இளம் செந்நிறமும்
குருதிச்சிவப்பும் சிவப்பும்
பச்சையும் மஞ்சளும் வெள்ளையும் என
மணத்தைப் பரப்பி
மனத்தைக் கொள்ளை கொள்ளும் 3,800 இரகங்கள்.
பலவண்ண ரோஜாக்களைப் பிரசவிக்கத் தயாராகும்
பச்சைநிறக் கருவறைகள், மொட்டுக்கள்.
மலர்வனத்துக்கு வந்து போகும் குருவி ஒன்றும்
வெள்ளை ரோஜாவும் உறவில் நெருக்கமாயின.
உறவு நட்பாக மலர்ந்தது.
வெள்ளை ரோஜா ஒருநாள் குருவி நண்பனிடம்
இப்படிச் சொல்லி அழுதது.
வருவோர் போவோர் யாரும் என்னிடம் வருவதில்லை
எனது நிறம் பார்வைக்கு எடுப்பாய் இல்லை
மற்ற ரோஜாக்களிடமே செல்கிறார்கள்
நான் ஒதுக்கப்படுகிறேன், நிராகரிக்கப்படுகிறேன்.
நண்பனின் கண்ணீரைத் துடைக்க விரைந்தது குருவி.
முட்செடியில் உடலை உராய்த்தது. குருதியும் கொட்டியது.
பறந்து வந்து வெள்ளை ரோஜாவைக் குருதியால் நனைத்தது.
நண்பருக்காகக் குருதி சிந்துவதைவிட
மேலான தியாகம் உண்டா?








All the contents on this site are copyrighted ©.