2012-05-15 15:31:39

மதச்சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கனடா அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து ஆயர்கள் கவலை


மே,15,2012. மதச்சுதந்திரம் நசுக்கப்படும்போது, மனித சமுதாயத்தின் அனைத்து உரிமைகளும் வலுவிழந்து போகின்றன என்றும், இதனால் சமுதாயம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது என்றும் கனடாவின் கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
கனடா ஆயர் பேரவை இத்திங்களன்று வெளியிட்ட ஒரு மேய்ப்புப் பணி மடலில், மதச்சுதந்திரத்திற்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கனடா அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகள் குறித்து தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மக்களின் பொது வாழ்விலிருந்து மதங்களை பிரித்து, அவற்றைத் தனி மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஓர் அம்சமாக அரசு மாற்றியமைக்க முயற்சிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று ஆயர்கள் கூறியுள்ளனர்.
மனித சமுதாயத்தின் ஒரு முக்கிய அங்கம் மதங்கள் என்பதையும், மதத்திற்கும், அரசுக்கும் இடையே நல்லுறவு வளர வேண்டும் என்பதையும் கனடா அரசுக்கு உணர்த்தும் கடமை மக்களுக்கு உள்ளது என்று ஆயர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.