2012-05-14 13:46:03

கவிதைக் கனவுகள் ... கொடுத்துக் கொண்டே இரு


பாதாள இரயில்கள் பேருந்துகள்
பால் மணம் மாறாத பச்சிளம் பிள்ளைகள்
பாட்டுப் பாடி பசியைச் சொல்லி
கையேந்துகின்றன
பாவம் என்று பரிதாபட்டுக் காசு போடுபவர் சிலர்
குற்றக் கும்பலை வசை பாடுபவர் பலர்
சமூகக் குற்றத்திற்கு குழந்தை என்ன செய்யும்?
மனிதர் வாழும் போதே கொடுக்காத கைகள்
மனிதர் சாகும் போது வாய்க்கரிசி போடுகின்றன
கொடுப்பதாய் இருந்தால் மனிதர் வாழும் போதே
கொடுத்து உதவு
கொடுக்கும் நிலையிலே இரு
கொடுப்பதற்கு என்னிடம் என்ன இருக்கின்றது என்ற
கேள்விகள் குழப்பாதிருக்கட்டும்!
அன்பைத் தேடும் மனிதருக்குத் தேவை
இனிய சொற்கள்.
துன்பப்படும் மனிதருக்குத் தேவை
ஆறுதல் மொழி
குழப்பத்தில் இருப்பவருக்குத் தேவை
அமைதி மொழி
இவற்றை வாங்கக் காசு தேவையில்லை
நல்ல மனம் ஒன்றே போதும்.
ஒன்றை உணர்ந்து கொள்
பெறுபவர் அல்ல, கொடுப்பவரே பேறுபெற்றவர்.
கொடுப்பதில் அயராத, அசராத அன்னையர் பேறு பெற்றோர்







All the contents on this site are copyrighted ©.